பெருந்தோட்டச்சமூகம்: சமூக மாற்றங்களும் நகர்வுகளும் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | பேராசிரியர் எம். சின்னத்தம்பி
Description
இலங்கையில் வாழும் இந்திய தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேறுபட்ட பெயர்களால் அழைப்பது அவர்கள் தமது இனஅடையாளத்தை இன்னும் உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்துவதாக டேனியல் என்ற அறிஞர் கூறுகிறார்.
1946இல் இந்தநாட்டின் மொத்தசனத்தொகையில் இந்தியத்தமிழர் 11.7 வீதமாக இருந்தனர். ஆனால் 1981 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணிப்பீட்டில் அவர்களது சனத்தொகைப்பங்கு 5.5 வீதமென மதிப்பிடப்பட்டது. இவ்விரு சனத்தொகைக் கணிப்பீட்டு ஆண்டுகளுக்குமிடையே அவர்களது சனத்தொகைப்பங்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையை இது காட்டுகின்றது.
மலையக இளைஞர்களுக்கு சுயதொழில் முயற்சிகளை மேற்கொண்டு வருமானம் ஈட்டிக்கொள்வதற்குத் தேவையான கடன்வசதிகளும், வேறு மூலதன சாதனங்களும், அவ்வித தொழில் நடவடிக்கைகளைக் கொண்டு நடத்துவதற்கான இடவசதிகளும் அவர்களிடம் இல்லாததால் சுயதொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்டிக்கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு இருப்பதில்லை. தலைமைவகிக்கும் பண்புகள், போட்டிமனப்பாங்கு என்பன அவர்களிடையே போதுமான அளவு இல்லாதிருப்பதும் இதற்குப்பங்களிக்கும் இன்னொரு காரணியாகும்.
#realestate #upcountry #kandy #upcountrysrilanka #TeaWorkers #upcountrypoliticians #teaplantation #teaestates #teaharvester #மலையகம் #தோட்டத்தொழிலாளர்கள் #தேயிலைத்தோட்டம் #educationinupcountry